Sunday, May 14, 2006

மாநகரம் . சென்னை மாநகரம் . தலைநகரம் . நல்ல தலைநகரம்

திரையில் ஒரு காட்சி.
எங்கும் கற்கள் சிதறி கிடக்கிறது. ஒரு பக்கம் டி வி எஸ் 50 வண்டி நெருப்பில் எரியுது. அந்த பக்கம் பாத்தா ஒரு சுமோ வண்டி நொறுங்கி கிடக்கிறது. எங்கும் ஆட்கள் ஓடுகிறார்கள். எங்கும் போர்கோலம்.
இது என்ன?
1. ஒரு ரவுடிஸம் பற்றிய மசாலா தமிழ் பட படப்பிடிப்போ?
2. ஈராக் நாட்டில் நம் மக்கள் படும் வேதனையோ?

இல்லவே இல்லை.

இது ஜெயா டிவியில் காட்டப்பட்ட தமிழ்நாட்டின் தலைநகரமான "சிங்கார சென்னை". "மாநகரமா" அல்லது "மாநரகமா" என்று பார்ப்பவரை கலங்கச் செய்யும் ஒரு தோற்றம்.

ஏனிந்த மாற்றம்? ஆட்சி மாறினால் "நகரம்" "நரகம்" ஆகுமா?"மாஸ் மீடியா" என்று சொல்லப்படும் தொலை தொடர்பு ஊடகத்தில் இருப்பவர்கள் சிறிது பொறுப்புடன் நடப்பார்களா? என்ற ஏக்கமுடன்...பிரைட்

டிவியில் கண்டு உள்ளத்தை உலுக்கிய சில:
1. கல்லுரி மாணவியர் சென்ற பேருந்தை நெருப்புக்கு இரை ஆக்கியதால் மாணவியின் மரணம்.
2. குஜராத் நில நடுக்க சேதங்கள்.
3. கொடுங்கோலன் புஷ் ஆல் சின்னா பின்னமாக்கப்பட்ட இராக்.
4. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள்.
5. இப்போது சிங்கார சென்னை.....

....இன்னும் எத்தனையோ?

0 Comments:

Post a Comment

<< Home