இலவு காத்த கிளி
ஒரு சின்ன கதை.
இலவம் பஞ்சு காய்க்கும் ஒரு மரத்தில், கிளி ஒன்று தங்கி இருந்ததாம்.
காய்க்கும் பருவம் வந்தது. இலவம் பஞ்சு காய்த்தது. அந்த கிளிக்கு இலவம் பஞ்சு பத்தி தெரியாது. அதனால், அந்த காயை பார்த்த கிளி, ஆஹா, மிக பெரிய வேட்டை தான். இந்த காய் பழமானதும் நன்றாக ருசிக்கலாம், என்று எண்ணி காத்திருந்ததாம்.
கிளிக்கு தெரியவில்லை, அது பழம் இல்லை என்று. ஒரு நாள் அந்த காய் வெடித்து இலவம் பஞ்சு காற்றில் பறந்து போனது. கிளி ஏமாந்து போனது. ஆனாலும் அந்த கிளி அடுத்த காய் பழுக்கும் என்று மீண்டும் நம்பி மறுபடியும் காத்துக்கிடந்தது.
இந்த கதை யாரோ சொல்லி நான் கேட்டது.
கடந்த இரு வாரமாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியால் இதை எழுதணும்னு தோணிச்சி...ஏன் போறோம், எதுக்கு போறோம் என்று ஒன்றும் தெரியாமல் எல்லோரும் போறாங்க, அதனால நானும் போறேன் என்ற கதையாய் சனிக்கிழமைகளில் ஆஃபிஸ் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.
அனைவரும் செல்வதால் செல்கிறேன் என்பதற்காக ஆட்டு மந்தையோடு ஒப்பிடுவதா, அல்லது எதுக்கு காத்து கிடக்கிறோம் என்று தெரியாமல் காத்திருப்பதால், இலவு காத்த கிளியோடு ஒப்பிடுவதா என்பது அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில்,
பிரைட்.
0 Comments:
Post a Comment
<< Home