பக்ரைனில் ஒரு டீக்கடை - Part I
இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வெறும் கற்பனையே...யாரையாவது குறிப்பது போல் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல!!
நிறைய பணம் படைத்த ஒருவர் சென்னையில் இருந்து மதுரை செல்ல வேன்டும். அதற்காக அவர் ஒரு பெரிய மென்பொருள் அலோசனை கடைக்கு சென்றார். அந்த கடை ஒரு மேனஜரை நியமனம் செய்தது. அந்த மேனஜர் மிக பெரிய அறிவாளி. அவர் அந்த பணக்காரரை சேலத்திற்கு கூட்டிச் சென்று இது தான் நீங்க போக வேன்டிய இடம் என்று சொல்லி ஏமாற்றினார். அந்த புத்திசாலி பணக்காரர் திடீரென்று என்ன இங்க மதுரன்னு ஒண்ணுமே இல்ல அப்படீன்னு கேட்க...திக்கு முக்காடி போன நம்ம மேனேசரு பணக்காரரை கொண்டு போயி திருச்சில இறக்கி விட்டுட்டார். ரொம்ப சந்தோச பட்ட பணக்காரர் நம்ம மேனேசருக்கு ஒரு பெரிய பரிசு வேற கொடுத்திருக்கார். ஆக மொத்தத்துல மேட்டர் என்னன்னா பணக்காரர் போக வேண்டிய எடத்துக்கும் போகல...ஆனா நம்ம மேனேசரு "Value Added Service" அப்படீன்னு சொல்லி "Gift" வேற வாங்கிட்டாரு !
இன்னைக்கு இந்த பொலம்பலோட முடிச்சிக்கிறேன்.
...பிரைட்.
0 Comments:
Post a Comment
<< Home