பஹ்ரெயினில் ஒரு மழைக்காலம்.
பஹ்ரெய்ன் வந்து ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிறது. போன வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம், கொஞ்சம் மழை அதிகம். நாலைந்து முறை மழை பெய்தது. அவ்வாறு ஒரு முறை மழை பெய்யும் போது, அலுவலகத்திலிருந்து என் நண்பர் மூலம் எடுத்த புகைப்படம் தான் கீழே காண்பது.
இந்தப் படத்தை இங்கே போட்டதற்கு வேறு இரண்டு காரணங்களும் இருக்கிறது.
1. பஹ்ரெய்ன் மத்திய கிழக்கு பகுதியிலிருக்கும் ஒரு பாலைவன தேசம் என்ற எண்ணம் பரவலாக அறிய படும் போதும், இங்கு காணப்படும் பசுமைகளைப் பாருங்கள்.
2. மழை பெய்ததால் சரியான வடிகால் வசதி இல்லாமல், தண்ணீர் தேங்கியிருப்பதைப் பாருங்கள். இது எவ்வளவோ பரவாயில்லை. தெருக்களில் தேங்கியிருந்த தண்ணீரை படம் பிடிக்க சரியான வாய்ப்பு அமையவில்லை. ஆனால் சென்னை மட்டும் இல்லாமல், பஹ்ரெய்னிலும், மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி விடுவதால் ஏற்படும் அவஸ்தை உணர முடிந்தது.
...பிரைட்.
1 Comments:
வணக்கம்! நான் ஒரு தமிழ் மானவி பிலடெபியவில். உங்கள் blog ரொம்ப நல்ல blog. இந்த படம் பிடிக்கறது. ரொம்ப நன்ரி!
-சாரா
Post a Comment
<< Home