Wednesday, June 14, 2006

முறமா? சல்லடையா?

சின்ன வயசில அம்மா அரிசி சலிக்கும் போது கைல கெடைச்சதை எல்லாம் தூக்கி சல்லடைல போட்டது ஞாபகத்துக்கு வருது. ஆனா பதிவு அத பத்தினது கிடையாது.

முறதுக்கும் சல்லடைக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு.
முறம் நல்லத எல்லாம் தன் கிட்டே வச்சிக்கிட்டு தேவை இல்லாத மத்ததை கீழே தள்ளிடும்.
சல்லடை நல்லதை கீழே தள்ளிட்டு தேவை இல்லாததை தன்னோட வச்சிக்கும்.

நாம முறம் மாதிரி இருக்குறதா இல்ல சல்லடை மாதிரி இருக்குறதாங்க்றது அவுங்கவுங்க விருப்பம்.

ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகத்தில் இருக்கணும். நல்லத விட கெட்டது ரொம்ப சுலபமா ஒருத்தர மயக்கிடும்.

சமீபத்தில் படித்த செய்தி.
அமெரிக்காவில் இருந்து ஒரு 16 வயது பெண் வீட்டில் சொல்லாமல் வளைகுடா நாடு ஒன்றிற்கு வந்து விட்டார். எதற்கு? சமூக சேவை செய்யவா? இல்ல்வே இல்லை. myspace.com என்று சொல்லப்படுகிற ஒரு வளைப்பதிவில் அறிமுகமான ஒரு நண்பரை பார்ப்பதற்காக இவ்வாறு செய்துள்ளார். இது ஒரு குற்றம் என்பதால் தான் இது செய்தி தாளில் வெளியானது. தவறு செய்தவர் அமெரிக்க பெண் என்றோ அல்லது தவறுக்கான காரணம் internet என்பதாலோ இது தப்பில்லை என்று கூற முடியாது.

தற்போது வெளியாகும் தமிழ் படங்களை பார்க்கும் போது மனதில் ஒரு நெருடல்...சின்ன கலக்கம், லேசான பயம். வன்முறையும் வக்கிரமும் தான் வாழ்க்கை என்பது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. அத்தகைய படத்தை பாராட்டியும் சிலர் கூறும் போது வெறுப்பு தான் வருகிறது.

காந்தி படம் பார்த்து யாராவது காந்தி ஆனார்களா? அப்புறம் ஏன் 'தாதா' படம் பார்த்தால் மட்டும் குறை சொல்கிறார்கள் என்பது போன்ற கேள்வி வெறும் விதண்டாவாதம் அன்றி வேறில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

வீட்டிற்கு வரும் நண்பருக்கு காபி கொடுப்பது வழக்கம். விருந்தோம்பல் என்று சொல்லப்படுவது. ஆனால் காபியோடு 'கஞ்சா' கலந்து கொடுப்ப்து நயவஞ்சகம். அதை விடக் கொடுமை நண்பர் 'கஞ்சா'வைத் தான் விரும்புகிறார் என்று எடுத்துக் கொள்வதும், நண்பருக்கு 'கஞ்சா' கலக்கி கொடுப்பது ஒன்றும் தவறில்லை, அது சற்றே வழக்கத்திலிருந்து மாறுபட்டு செயல்படுவது என்றும் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்வதும் கொடியதிலும் பெரிய கொடியது. இதைத் தான் இன்றைய தமிழ் சினிமா செய்கிறது.

ஒரு ராமனைப் பற்றி சொல்லும் போது, ராவணன் கதை வந்தால், மனம் பண்படும். ஆனால், ராவணனை பற்றி மட்டுமே சொல்லி, ராமனும் அங்கு இருந்தான் என்று சொன்னால் மனம் புண்படும்.

அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ் நாடு, ரத்தக் களரியாக காட்சியளிக்கும் 'கொலை நாடு' போல் சித்தரிக்கும் இந்த திரைப்படங்களால் யாருக்கு தான் நன்மை?

ஓ மனமே..ஓ மனமே..உள்ளிருந்து அழுவது யார்?

...பிரைட்


பி.கு.
பின்வரும் பதிவை படித்த பிறகு எனக்கு தோன்றியதை புலம்பலாக கொட்டி விட்டேன். அவர் கருத்தை அவர் சொல்லியுள்ளார். என் கருத்தை நான் சொல்லியுள்ளேன். அவ்வளவு தான். மற்றபடி யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.
http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_14.html

2 Comments:

At Sunday, July 09, 2006, Blogger Bala said...

Fundamentally I have thoughts similar to you, But practically I like this movie. I want to learn and understand different lifestyles and their problems in our society. This movie was a exact picturization of what I expected. I like it for that...

 
At Sunday, July 09, 2006, Blogger K Bright Inbasagaran said...

நன்றி பாலா.
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். சமுதாய முன்னேற்ற பாதையை வலியுறுத்தும் படங்கள் வருவதற்கு பதில், சமுதாய சீரழிவுகளை படம் போட்டு காட்டுவதே வாடிக்கையாகி விட்டது என்பது என் ஆதங்கம்.

ஒரு சிறிய எடுத்துக்காட்டு. இரண்டு ஆங்கில படம் - 'Monsoon Wedding' & 'My Big Fat Greek Wedding'. வெவ்வேறு கலாசாரம் பற்றியது. எந்த படத்தைப் பார்க்கும் போது உங்கள் மனதில் அந்த கலாசாரம் பற்றி உயர்வாக தோன்றும்.

உங்களின் வலைப்பதிவை பார்த்தேன். நிறைவாக இருந்தது. வாழ்த்துக்கள்.

...பிரைட்.

 

Post a Comment

<< Home