Monday, June 26, 2006

முகமூடிகள் - எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்...

சில நாட்களுக்கு முன், நண்பர் ஒருவர் மனிதர்க்ளின் முகமூடி பற்றி பதிவிட்டிருந்தார். அதற்கு நானும் பின்னூட்டம் எழுதி இருந்தேன். ஆனால் இன்றைய நிலைமையில் முகமூடி தான் வாழ்க்கை என்பது போல் ஒரு நிலை.
வேலை செய்யும் இடத்தில் நம்மை ஒருவர் கண்காணித்துக் கொண்டிருந்தால் தான் வேலை செய்வதாய் பாவ்லா காட்டுபவர்கள் ஒரு வகை. அதற்கு மேலே ஏதோ அத்தகையோர் தான் இந்த உலகத்தையே தாங்கி நிற்பது போல் தோற்றம் ஏற்படுத்துவது. அதையும் நம்பும் அப்பாவி மேனேஜர்கள் மற்றொரு வகை. எதை குற்றம் என்று சொல்ல.
என் அலுவலகத்தில் Appraisal System என்று ஒரு வழக்கம் உண்டு. சரியான முறையில் பயன்படுத்தினால், இது உண்மையில், கடந்த 12 மாதமாக எப்படி வேலை செய்தேன் என்று எனது கண்காணிப்பாளர் [appraiser] என்னை அளவீடு செய்து, அதன் மூலம் கம்பெனிக்கு நான் எவ்வளவு முக்கியமானவன் என்று கருதி, அதற்கேற்ப என்னுடைய compensation package வழங்க வேண்டும்.
ஆனால், உண்மையில் நடப்பது, appraisal period ல் கடைசி நாட்களில் யார் appraiser ன் மனதுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுவது. உண்மையாக உழைப்பவருக்கும், நடிப்பவருக்கும் நடக்கும் போட்டியில், உழைப்பாளி வழக்கம் போல் ஏமாந்து விடுவார்.
இந்த நிலை இருக்கும் வரை, appraiser இருக்கும் சமயங்களில் சும்மாவேனும் இரவு 10 மணி வரை உட்கார்ந்து கொண்டு உலகமே தன்னால் தான் சுழலும் என்று படம் காட்டிக் கொண்டு, appraiser இல்லாத சமயங்களில், சாவதானமாக 11 - 11.30 மணிக்கு office வந்து, 4 - 4.30 மணிக்கு வீட்டிற்கு கிளம்பி விடும் அவலம் தொடர தான் செய்யும்.
பழைய பாடலில் வருவதைப் போல்..திருடராய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது...

...பிரைட்

0 Comments:

Post a Comment

<< Home