Friends படமும் Software Project-ம்
சமீபத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பிரண்ட்ஸ் [friends] படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை காட்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் ஒரு வீட்டிற்கு [படத்தின்படி, அது ஒரு அரண்மனை] சுண்ணாம்பு அடிப்பதற்காக செல்வார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் பாருங்கள்...ஒரே கலக்கல் தான்!
அதிலும், நீங்கள் மென்பொருள் பொறியாளராக வேலை செய்பவராக இருந்தால், சற்றே உங்கள் வேலை பளுவை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த குறிப்பிட்ட சில காட்சிகளை கண்டு களியுங்கள்.
வடிவேலுவை உங்கள் project manager ஆகவும், விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணாவை உங்கள் office friends ஆகவும் உருவகப்படுத்திக் கொண்டு பாருங்கள். ஒரு software development project ல் நடைபெறுவது அப்படியே கண் முன் வந்து நிற்கும்.
விஜய், சூர்யா அடிக்கும் லூட்டியும் அவர்களால் ஒவ்வொரு முறையும் வடிவேலு திட்டு வாங்குவதும், team member - project manager - client manager காட்சியை நினைவுறுத்தும்.
"நீ ஆணியே புடுங்க வேண்டாம்" என்று சொல்லும் போது, புதிதாக code அடிக்க ஆரம்பித்த team member - project manager பேசிக் கொள்வது நினைவுக்கு வந்தது.
"உன் வேலை என்னடா?"
"இவுங்க ரெண்டு பேரும் வேலை செய்யாம பாத்துக்கறது தான் என் வேலை" "போடாங்க....எவன்டா உங்க மொதலாளி..."
என்று சொல்லும் போது, ஏனோ எனக்கு என் project நினைவுக்கு வந்து, 'குபீரென்று' சிரித்து விட்டேன்.
உண்மையில் அந்த 15 நிமிடம் போனதே தெரியாமல், சிரித்து சிரித்து ஒரே வயிறு வலி தான் போங்கள்.
...பிரைட்
0 Comments:
Post a Comment
<< Home