Sunday, March 04, 2007

உயரமா ? அகலமா ?

திரு. இராமலிங்கம் அவர்களின், கவியரசு கண்ணதாசன் பற்றிய ஒரு சொற்பொழிவிலிருந்து ...

நாலைந்து பேர் சேர்ந்து ஒரு கொடி கம்பம் மேலே ஏறி ஏதோ செய்ய முயன்று கொண்டிருந்தனர். அந்த வழியே சென்ற ஒரு பெரியவர், என்ன செய்கிறீர்கள், என்று கேட்க, அவர்கள், இந்த கொடி கம்பத்தின் உயரத்தை அளக்க எங்கள் தலைவர் சொன்னார், அது தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு அந்த பெரியவர், ஏம்பா இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள், அந்த கம்பத்தை சாய்த்து வைத்து அதன் உயரத்தை அளக்க வேண்டியது தானே? என்று ஆலோசனை சொன்னார். உடனே அந்த கும்பல் அவரைப் பார்த்து சொன்னதாம், "தோ பாருடா, வந்துட்டாரு ஷெர்லாக் ஹோம்ஸ்ஸு ... யோவ் பெரிசு, எங்களுக்கும் தெரியும், கம்பத்தை சாய்த்து வைத்து அளப்பது ஈஸின்னு. ஆனா, எங்க தலைவன் அளக்க சொன்னது உயரத்தை, அகலத்தை இல்லை...".

இது போன்ற சமயங்களில், நமக்கென்ன வந்தது என்று தாமரை இலை மேல் விழுந்த நீர் போல இருந்து விடுவது மேல். இல்லையென்றால் இப்படித் தான் ஆகிவிடும். ஆனால், இது போன்ற தொண்டர்களை வைத்திருப்பது தான் ஒரு தலைவனின் வெற்றியும் கூட...என்ன சொல்கிறீர்கள்?

பிரைட்.

0 Comments:

Post a Comment

<< Home