ஜெர்மனியின் செந்தேன் மலரே
சமீபத்தில் நண்பர் ஒருவர் ஜெர்மனியில் இருந்து திரும்பி வந்தார். உலக கோப்பை கால் பந்தாட்ட போட்டி [FIFA 2006] நடந்த சமயம் அதை நேரில் காண கிடைத்த வாய்ப்பு பற்றியும், கால் பந்தாட்ட ரசிகர்களின் முகம் மற்றும் சிகை அலங்காரங்களைப் பற்றியும் பக்கம் பக்கமாக விவரித்து எழுதியிருந்தார். அதை படித்த போது மனம் கொஞ்சம் பின் நோக்கி பார்த்தது.
இது வரை நான் நான்கு நாடுகளுக்குச் சென்றுள்ளேன். எல்லாமே எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்புகள் தான். ஆனால் இந்த ஜெர்மனிக்குச் செல்லும் வாய்ப்பு மட்டும் தட்டிப் போய் கொண்டே இருக்கிறது.
நான் முதலில் வேலை ஆரம்பித்தது ஒரு ஜெர்மன் client காக தான். ஒரு வருடம் கழித்து, 1999ல், அந்த client காக ஒரு புது development project செய்ய ஜெர்மனி செல்ல தொலைபேசி காணலில்[telephonic interview] தேர்வு செய்ய பட்டேன். அதே காலகட்டத்தில் நான் BITS Pilani - DLPD மூலம் MS படித்துக் கொண்டிருந்தேன். அதற்கான் தேர்வு நெருங்கி வந்தது, client யிடம் இருந்து invitation letter வரவில்லை. அதனால் என்னுடைய Mentor இந்த முறை ஜெர்மனி செல்ல என்னால் முடியாது என்று client-க்கு சொல்லி விட்டார். அந்த Project-ம் கிடப்பில் போடப்பட்டது.
அடுத்தது, 2004ல், ஒரு strategy presentation காக ஒரு நாள் மட்டும் ஜெர்மனி செல்ல வேண்டி வந்தது. presentation எல்லாம் தயாரித்து முடித்து கிளம்ப விசா பேப்பர் எல்லாம் அனுப்பிய பிறகு ஒரு நாளைக்காக எதற்கு வீண் செலவு என்று சொல்லி, ஜெர்மனியில் ஏற்கனவே இருந்த ஒருவரை வைத்து அந்த presentation முடிந்தது.
சமீபத்தில், 2005ல், ஜெர்மனியில் ஒரு Technical Workshop காக IBM Sponsorshipல் ஜெர்மனிக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லி கடைசியில் அது என்னவாயிற்று என்றே தெரியவில்லை.
இதுல இருந்து நான் என்ன சொல்ல வரேன்னா, அட ஒண்ணுமே சொல்லலீங்க...ஏதாவது எழுதணும்னு தோணிச்சு...சரின்னு இந்த 'மொக்கை' போட்டுட்டேன். இப்ப எஸ்கேப் ஆயிக்கறேன்...
பிரைட்
0 Comments:
Post a Comment
<< Home