லினக்ஸில் தமிழ்.
மிகுந்த தேடலுக்குப் பின், SCIM என்ற மென்பொருள் உதவியுடன் லினக்ஸில் தமிழிலேயே தட்டச்சு செய்ய அமைத்துக் கொண்டேன். அந்த சந்தோஷத்தில் பதியும் பதிவு இது.
என்னுடைய IBM R40e லேப்டாப்பில் பதிந்த ஒரே லினக்ஸ் சுஸே லினக்ஸ் 9.3. அதனால், எனக்கு சுஸேயை அழிப்பதற்கு மனசே இல்லை. ஆனால், உபுன்டு லினக்ஸ் 6.10 பார்த்த பின்னர், நான் எனது மனதை மாற்றிக்கொண்டேன். உண்மையில் முழுமையான லினக்ஸ் டெஸ்க்டாப் கிடைத்து விட்ட ஒரு முழு திருப்தி. நான் எதிர்பார்த்த அனைத்து மென்பொருளும் மிக எளிதாக அமைந்து விட்டது. ஆனால் internet connection மிகவும் முக்கியம். என்னுடைய தேடலும் விடையும் பின்னர் வரும் பதிவுகளில் பதிகிறேன்.
அனைவருக்கும் சர்வஜித் புத்தாண்டு வாழ்த்துகள்.
...பிரைட்
1 Comments:
இந்த பதிவை நான், எனது லினக்ஸ் டெக்ஸ்ட் எடிட்டரில் [gedit] இருந்து தட்டச்சு செய்து இருக்கிறேன். By default, UTF-8 format-ல் உள்ளதால், அப்படியே blog-ல் போட்டு விட முடிகிறது.
...பிரைட்.
Post a Comment
<< Home