Monday, September 12, 2022

India Vacation 2022

என் மகன். நேத்து தான் வந்தான். என்று ஆரம்பித்து, என் மகன், நாளைக்கு ஊருக்குப் போறான் என்பதோடு இன்றைய நாள் முடிந்து விட்டது - India vacation 2022.

It had been a month since I returned back, from India vacation, to the US. The “human inertia” or the “homesickness” was keeping me at bay, before I could write this to my blog.


I thought that I could bring changes to my parents' long established and proven lifestyle, in a period of four (4) weeks. I was so naive that I thought an iPad Pro would bring completeness to their loneliness. In the end, I was like an alien. I was a visitor or a guest in my home. I struggled to align with the lifestyle that I grew up with. 


செக்கச் சிவந்த வானம் படத்திலிருந்து "மழைக்குருவி" பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது:

(paraphrased based on my interpretation)


மழையில் நனைந்த சிட்டுக்குருவி, வழி தெரியாமல் திணறுகிறது. மழை நீரினால், அதன் கண்ணீரும் தெரியவில்லை; ஆனால், காட்டில் சொல்வது, வீட்டை விட்டு வெளியேறிய குருவி, வானத்தில் கும்மி அடிக்கிறது என்று. 


இந்த பாடல் வரிகளின் அர்த்தத்தில், காட்டில் நிலவும் பேச்சு அந்தக் குருவிக்கு தெரியாது. ஒரு வேளை அந்தக் குருவி கேட்டிருந்தால், அதன் மனம் எப்படி வலித்திருக்கும் என்று இப்பாடலை எழுதிய கவிஞர் நினைக்கவில்லை. ஒரு வகையில் அது அந்த குருவிக்கு கிடைத்த வரமாக கருதிவிட்டு போகலாம்.


நிஜத்தில், குருவி அதன் கடமையில் இருந்து தவறி கும்மியடிப்பதாக நினைப்பது மட்டும் இல்லை...அதன் சேர்க்கையே வேண்டாம் என்று சொந்தக்கார குருவிகளால் ஒதுக்கி வைக்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், குருவியின் வருகைக்காக  அதன் கூடும், அப்பா குருவியும், அம்மா குருவியும் மட்டும் என்றும் மாறாத பாசத்தோடு காத்துக் கொண்டிருக்கும்.


I am torn between my body, mind and soul; Body is in the US, Mind is in Chennai and Soul is nowhere to be seen … இந்தப் பாதை எங்கே போகும் என்று தெரியவில்லை; எங்கோ மனம் பறக்குது!


0 Comments:

Post a Comment

<< Home