மழை சாரல் - நீர்த்துளி
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்!
அந்த மாற்றங்களை எண்ணிய போது ஏற்பட்ட ஏக்கங்களினால் மனம் சிறிது தொய்விட்டிருந்த போது, சிறு வயதில், என் தந்தையின் மடியில் படுத்துக் கொண்டு, அவர் அன்புடன் என் தலை முடியை கோதிவிடுவது போன்று ஒரு இனிமையான நினைவூட்டலுடன் கேட்ட பாடல்,
“நீல மழைச்சாரல்...” பாட்டு, செக்கச் செவந்த வானம் படத்திலிருந்து. மழைச்சாரலில் நனையா விட்டாலும், அந்தப் பாடலின் தாக்கத்தினால், கண்ணின் ஓரம் துளிர்த்த நீர்த்துளியில் நனைந்தேன்.
தேனில் ஊறிய பலாவை சுவைத்ததில்லை. ஆனால், செவிக்கு உணவாக உவமைப் படுத்தினால், ஒரு வேளை இந்தப் பாட்டை தான் சொல்லுவேன்.
எ. ஆர். ரகுமான் இசையில், அவரின் குரலில், “நீல மழைச்சாரல்” விடாமல் தூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

0 Comments:
Post a Comment
<< Home