Tuesday, April 11, 2017

சூழ்நிலைக் கைதி

கடந்த வாரம் ஞாயிறு [April 9, 2017] ஒரு முக்கியமான நாள்!

  1. உறவினர் திருமணம். 
  2. நலம் விரும்பியின் வீட்டு விசேஷம். 
  3. நெருங்கிய தோழியின் மணவிழா. 

இதில் எதிலும் கலந்துக் கொள்ள முடியாத சூழ்நிலை.

நேரில் தான் கலந்துக் கொள்ள முடியவில்லையே தவிர, மனம் என்னவோ அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருந்தது. காதல் வயப்பட்டால், வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் ஏதோ உருளவது போல் தோன்றுதடி என்று சமகால கவிஞர் பாடியது போல், ஏதோ ஒரு இனம் புரியாத குழப்பம்.

மனம் முழுக்க சொந்தங்களையும், சொந்த மண்ணையும் மட்டுமே சுற்றி வர, வேறு சில கடமைகளால், கட்டுண்டு வேறொரு நாட்டில் வாழ்ந்து வரும் ஒரு சாதாரண மனிதனின் உள்ளக் குழப்பம் தான் இது.

உடனே, இது தேவையா...ஊரைப் பாத்து கிளம்பி வர வேண்டியது தானே? என்பது தான் அனைவரின் எளிய விளக்கமாக இருக்கும்.

ஆனால், இது ஒரு இக்கட்டான சூழ்நிலை. இது போன்ற சூழலில் சிக்கி இருக்கும் எவருமே ஒரு வகை சூழ்நிலைக் கைதி தான்.

கனவுகளுடன்,
பிரைட்

0 Comments:

Post a Comment

<< Home