Saturday, January 17, 2015

கனவுகள் மெய்பட வேண்டும்

நீண்ட நாட்கள் கழித்து ஒரு "மறந்து விட்ட" நண்பனை கண்டு, பேசிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வெகு சில நிமிடங்களில், ஏண்டா, இது உனக்கு தேவையா? என்று என்னையே கேட்டுக்கொள்ளும் நிலை. நீ நலமா? குடும்பம் நலமா? என்ற சிறிய விசாரிப்புக்கு பின்னர், எல்லாமே ஒரு salesman கிட்ட மாட்டிக்கிட்ட ஒரு feeling.

நான் ஒரு ranch property வாங்கிட்டேன். என்னோட basement area-வே 2500 sq.ft. என்னோட bike விலையே ஒரு காரை விட விலை அதிகம். அதை நிறுத்தி வைக்கவே ஒரு தனி garage கட்டி இருக்கேன். இப்போ ஒரு mercedes car வாங்க பாத்துக்கிட்டிருக்கேன். அதனாலே பயங்கரமா சிக்கனம் பாக்க வேண்டி இருக்கு என்று சுய புராணம் தான். இந்த சமயத்தில் TCS மாதிரி staff reduction வந்தா என்ன பண்றதுன்னு தெரியல என்று புலம்பல் வேற... இது ஏன்?

என் அப்பா retire ஆகும் போது அவர் வாங்கிய மாத சம்பளத்தை விட அதிகமாக, நான் வேலைக்கு சேர்ந்து முதல் மாதத்தில் வாங்கிய போது என்னுடன் சேர்ந்து, என் தந்தையும் மகிழ்ந்தார். அவர், 30 வருடம் வேலை செய்து, கனவுடன் கட்டிய வீட்டை காட்டிலும் பெரியதாக, முதல் 3 வருடத்தில், நான் வீடு வாங்கினேன், பெருமையாக இருந்தது. ஆனால், என் அப்பாவின் சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறிய போது அவர் அடைந்த ஒரு நிம்மதியை, உற்சாகத்தை என்னால் அனுபவிக்க முடியவில்லை.

கடனில் வாங்கிய வீடு என்பதால், அந்த கடனை அடைக்க, வெளிநாட்டு சம்பளம் மேல் ஆசைப்பட்டு, அந்த வீட்டில் நான் தங்க முடியவில்லை. இப்போது, அது பழைய வீடாகி விட்டதால், என் மனைவிற்கு வேறு பெரிய வீடு வாங்க ஆசை. அதனால், மேலும் பண தேவைக்கு, இன்னும் சில மாதம் வெளிநாடு என்று ஒரு வித பேராசை சுழலில் சிக்கிக் கொண்டுள்ளேன். இந்த சுழலில், எது கனவு, எது நினைவு என்ற நிலை தவறி, எதற்காக ஓடுகிறோம் என்ற உண்ர்வு மறந்து, என்னை சுற்றி இருப்பவர்கள் ஓடுகிறார்கள், அதனால் நானும் ஓட வேண்டும். இல்லை என்றால், மற்றவர் என்னை முட்டாள் என்று கேலி செய்வார்கள் என்ற ஒரு போலி காரணத்தை உருவாக்கி, இந்த சாலை எங்கே போகும்? என்ற உணர்தல் இன்றி, ஓடிக்கொண்டிருக்கிறேன்.

நம்முடைய கனவுகள் மெய்படுவதற்கு பணம் தேவைதான். ஆனால், பணம் தேடுவது மட்டும் தான் என் கனவு என்ற நிலைமை எப்போதிலிருந்து வந்தது?

மறந்துவிட்ட கனவுகளுடன்,
பிரைட்

0 Comments:

Post a Comment

<< Home