திரு' விளையாடல் ஆ-ரம்பம் !
திருவிளையாடல் - எனக்குப் பிடித்த ஒரு பழைய படம். அதைக் கிண்டலடிக்கும் விதமாக [spoof] இருக்குமோ என்று பார்த்தால், நல்ல வேளை அப்படி இல்லை. படத்தில் ஹீரோ பெயர் திரு, அவரின் விளையாட்டுகளால், படத்திற்கு இப்பெயர்.
பஸ்ஸில் பிளாக் டிக்கெட் விற்பதில் ஆரம்-பிக்கிறது திருவின் விளையாடல்.
தமிழ் சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி விட முடியும். இந்த படம் ஒன்றும் விதிவிலக்கல்ல.
1. வீட்டில் அப்பா அம்மாவின் மனம் வருந்தும் படி நடந்து, அவர்களால் வீட்டை விட்டு துரத்தப் பட்ட அடுத்த ஒரு வருடத்திற்குள் கோடீஸ்வரன் ஆகும் ஒரு ஹீரோ.
2. கண்டதும் காதல், கேட்டதும் காதல் என்று இல்லாமல், ஹீரோக்களின் சில லூசுத்தனமான சவாலினால் காதல் வயப்படும் மூளையே இல்லாமல், வெறும் Glamour Doll ஆக வந்து போகும் ஒரு / பல ஹீரோயின்[கள்].
3. ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்பட்டு, ஏதோ படித்து ஏதோ வேலையில் இருந்து, திருமணத்திற்காக மணமேடை வரை வந்தும் கூட, அனைவராலும் 'உதவாக்கரை, ஊர் சுற்றுபவன்' என்றெல்லாம் பெயர் பெற்ற எவனோ ஒருவனிடம், தனது 'would-be, fiance' என்று கனவு கண்ட பெண்ணை விட்டுக் கொடுத்து விட்டு, கல்யாண கோலத்தில் 'பேபே' என்று விழித்துக் கொண்டிருக்கும் 'தியாகத்தின் மறு உருவமாகிய' அமெரிக்க மாப்பிள்ளை.
4. கொஞ்சம் பாடல்கள் [சுட்ட பாட்டு, சுடாத பாட்டு என்று வெவ்வேறு வகையில்].
5. பாட்டுக்கு நடுவே சண்டை.
சில [பல] அப்பட்டமான சினிமா formula-க்களை நம் தமிழ் இயக்குநர்கள் எப்போது தான் விடுவார்களோ தெரியவில்லை. அதிலும் அவர்களுக்கு அமெரிக்கா செல்லும் தமிழ் இளைஞர்கள் மேல் ஏன் அவ்வளவு கடுப்போ தெரியவில்லை. கதைக்கு ஒரு இளிச்சவாயன் வேண்டும் என்றால் உடனே பிடி அமெரிக்க மாப்பிள்ளை என்று தாவி விடுகிறார்கள். ஏங்க? பல்பு குடுக்குறதுன்னு முடிவாயிடுச்சி. அதுக்கு நம்ம ஊருலேயே யாரும் சிக்க மாட்டாங்களா என்ன?
இது வரை வேற்று மொழி படங்களில் இருந்து சுட்டுக் கொண்டிருந்த நமது டைரக்டர்கள், இப்போது, பழைய தமிழ் படங்களிலேயே சுட ஆரம்பித்து விட்டார்கள்.
Mr. Bharath படத்திலிருந்து ஒரு பாடல், அண்ணாமலை படத்திலிருந்து பாதி படம் என்று ஒரு புது படம் எடுத்து விட்டார்கள்.
கோயிலுக்குள் போகும் போது செருப்பை வெளியே விட்டு செல்வதைப் போல, இனி மேல் சினிமாவுக்குப் போகும் போது, மூளையைக் கழட்டி வெளியே வைத்து விட்டுப் போக வேண்டியிருக்கும் போல தெரிகிறது.
லீவு நாளிலெல்லாம் ஒண்ணுமே செய்ய மாட்டேங்கிறோமே, atleast ஒரு சினிமாவுக்குக் கூட போகலியேன்னு நினைச்சா, கட்டாயம் இந்த படத்தைப் பாக்கலாம். ஏன்னா, அப்பத்தான், இந்த மாதிரி படம் பாக்குறத விட, நாம சும்மாவே இருந்திடலாம்னு ஒரு நம்பிக்கை தோணும்.
மீண்டும்,
பிரைட்.