Saturday, December 17, 2016

முரண்பாடு

சமீபத்தில் படித்தது:

ஒரு தந்தை மற்றும் திருமணமான அவரின் மகளுடனான ஒரு உரையாடல்.

மகளே, உனக்கு என்னை அதிகம் பிடிக்குமா, இல்லை உன் கணவரை அதிகம் பிடிக்குமா?

அப்பா, எனக்கு நேரடி பதில் தெரியவில்லை. ஆனால், அவரை பார்க்கும் போது, உங்கள் ஞாபகம் வருகிறது. உங்களை பார்க்கும் போது, அவரை மறந்து விடுகிறேன்.

நல்ல ஒரு நெகிழ்ச்சியானப் பதிவு. மகளைப் பெற்ற தந்தைக்குத் தெரியும் இந்த அன்பின் ஆழம். எல்லாம் சரி. ஆனால் ஒரு சின்ன மாற்று சிந்தனை.

ஒரு தாய் மற்றும் திருமணமான அவரின் மகனுடன் ஒரு "கற்பனை" உரையாடல்.

மகனே, உனக்கு என்னை அதிகம் பிடிக்குமா, இல்லை உன் மனைவியை அதிகம் பிடிக்குமா?

அம்மா, எனக்கு நேரடி பதில் தெரியவில்லை. ஆனால், அவளை பார்க்கும் போது, உங்கள் ஞாபகம் வருகிறது. உங்களை பார்க்கும் போது, அவளை மறந்து விடுகிறேன்.

இப்படி சொன்னால், எந்த மருமகளாவது, ஏற்றுக் கொள்வாரா?

முரண்பாடு?