Movie: Driving License
தமிழ் சினிமாவின் பொதுவான கதைக்களம்: ஒரு அப்பாவி ஊர், ஒரு வில்லன். அந்த வில்லன் செய்யும் அட்டூழியங்களை தட்டிக் கேட்க ஒரு ஹீரோ. எங்கே, எப்போது, எப்படி வில்லனும், ஹீரோவும் மோதி, ஹீரோ வெற்றி பெறுகிறார் என்பது, கதையின் நாயகனாக நடிப்பவரையும், படத்தை இயக்குபவரையும் பொறுத்து வேறுபடும். இந்த templateல் இல்லாமல் ஏதாவது புதிதாக முயற்சி செய்தால், அது மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் இருக்காது அல்லது சமூக கட்டமைப்பை அசைத்துப் பார்க்க கூடியாதாய் இருக்கும்.
நிற்க! இது எனது கருத்து.
இந்த கருத்தை மாற்றியமைக்கும் விதமாக அமைந்தது ஒரு மலையாள படம் - Driving License. இந்த படத்தில் யாரும் ஹீரோ இல்லை, ஒருவரும் வில்லன் இல்லை. இரண்டு வெவ்வேறு தொழில் களத்தில் இருக்கும் இரு நல்லவர்கள், ஒரு தவறான புரிதலால், மோதிக் கொள்கிறார்கள். ஒருவர், சிறந்த சினிமா நடிகர்; மற்றொருவர் அவருடைய ரசிகராய் இருக்கும் Motor Vehicle Inspector.
இருவரும் அவரவர் மனோதர்மத்தின் படி சரியாக நடந்து கொள்கிறார்கள். ஆனால், மற்றவரின் புரிதலில் அது தவறாக படுகிறது. இருவருக்கும் அவரவர் சுயமரியாதையை காப்பாற்றியாக வேண்டும். ஒரு வழியாக, அடுத்தவரின் நிலையை புரிந்து கொண்டு, “Cinderella Effect (living happily ever after)” என்று படம் முடிகிறது.
ஒரு நல்ல படம் பார்த்த மன நிறைவு! இது போன்ற ஒரு படத்தை ஏன் நம்ம ஊர் நாயகர்கள் நடிப்பில், தமிழ் இயக்குநர்களின் இயக்கத்தில் வருவதில்லை என்று ஒரு ஏக்கம் ஏற்பட்டதை மறுக்க முடியவில்லை.