Sunday, June 12, 2022

Vikram (1987) ... Vikram (2022)

ஆரம்பிக்கலாமா…

விக்ரம் (1987) - காலத்தை வென்ற கதை. மறைந்த திரு. சுஜாதா அவர்களின் படைப்பு. பள்ளிக்கூட வயதில் வியந்த, மிரண்ட அற்புதம். கம்ப்யூட்டர் பற்றிய புரிதலே இல்லாத சமயத்தில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (அக்னிபுத்திரன்) அதனை கட்டுப்படுத்தும் கணிணி (on board computer) - அதை இயக்க தேவைப்படும் கட்டுபாட்டு கட்டளைகள் (control code / source code overrides / virus upload) என்று பல விதத்தில் அசத்தி இருப்பார். டாம் க்ரூஸின் எல்லா Mission Impossible படத்திற்கும் முன்னோடி (ஆணி வேர்) ஆக சுஜாதா - கமல் அவர்களின் விக்ரம் படத்தை சொன்னால் அது மிகை அல்ல. 


விக்ரம் (2022) - பேர் சொல்லும் பிள்ளையா என்றால் தெரியவில்லை. பழைய black ops விக்ரம் தான் இந்த படத்தின் மையக் கருத்தென்றாலும், அதனை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தாலும் படத்தில் ஒன்றும் குறையாக எனக்குத் தெரியவில்லை.  


படத்தில் சொல்லுவது போல் சில / பல லட்சம் கோடி மதிப்புள்ள சரக்கை பிடிக்க ஒரு போலிஸ் உயர் அதிகாரி மட்டும் in-charge, அவரைத் தவிர வேறு யாரும் அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை என்பது கொஞ்சம் உறுத்துகிறது. 5000 ton cocaine தயாரிக்கும் அளவுக்கான மூலப்பொருள் சென்னை போன்ற ஒரு பெரிய நகருக்குள் சர்வ சாதாரணமாக வருகிறது என்பது, என்ன தான் வெள்ளித்திரை கதை என்றாலும் கலங்க வைக்கிறது. திரு. விஜயகாந்த் அவர்கள் மாநகர துணை கண்காணிப்பாளராக "மீண்டும்" காக்கிச் சட்டை போட வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. 


தமிழ் படங்களுக்கும் இரத்தத்திற்கும் என்ன அப்படி என்ன ஒரு பிடித்தம் என்று தெரியவில்லை...படம் முடிந்து திரையரங்கில் விளக்கு போட்டதும், நமது உடுப்பில் எங்காவது இரத்த கரை இருக்கிறதா என்று சோதித்து பார்க்கும் அளவிற்கு இரத்தம் தெறிக்கிறது. இது தான் திரைக்கதையின் முன்னேற்றமா, அல்லது இப்போதைய "அமைதிப் பூங்கா" தமிழ் மக்களின் விருப்பமா என்று வியக்கிறேன்.  


With all due respect to actor Mr. VS, இனி வரும் படங்களில் கொஞ்சம் புரியற மாதிரி தமிழ் பேசினால் நல்லா இருக்கும். அவர் பேசும் போது, தானாக கண்கள் “sub-title”ஐ தேடுகிறது (பார்ப்பது தமிழ் படம், கேட்பது தமிழ் என்பது மறந்து!)


மொத்தத்தில், விக்ரம் (1987) படத்தை தூசி தட்டி, technical enhance / remaster பண்ணி, மீண்டும் வெளியிட்டிருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் வந்தது... தகிட தத் தமிட, தகிட தத்தோம்! பழைய விக்ரம் படத்தைப் பார்க்காத, விரும்பாதவர்கள் கருத்து எப்படி இருக்கும் என்று அறிய ஆவலாக உள்ளேன்.


The natural law of the jungle was repeated in multiple instances - both by the protagonist and antagonist. The meaning of this reference is not clear to me; I will have to watch the film again. However, one statement that stuck with me was “one man’s revolution is another man’s terrorism”. So true, isn’t it? In the movie, the massive use of fire power by Karnan (a) Vikram or Amir is an act of revolution or terror depends on which side you look at it from - Bejoy or Sandhanam. 


Irrespective of who is right and who is wrong, the damage is to everyone because we all are one. Your success is benefitting me as much as my failure is impacting you. The secret is in understanding the HOW … and for me, that is the best screenplay in the making.