Thursday, March 16, 2017

ஓரு தலைவனின் பலம்

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன், "உயரமா? அகலமா?" என்று ஒரு பதிவிட்டிருந்தேன். இப்பொழுது அதைப் படிக்கும் போது தோன்றியதை இங்கு பதிவிடுகிறேன்.

அந்த கதையில் சொல்லப்பட்டது போல், உயரத்திற்கும், அகலத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு தொண்டன் இருந்தால், அது அந்த தலைவனின் பலமா? இல்லை பலவீனமா?

தனி மரம் தோப்பாகாது என்று ஒரு சொல்வடை உண்டு. அந்த தனி மரம் ஆலமரமாக இருந்தால், அதுவே ஒரு தோப்பு போல தோன்றும். ஒரு தலைவன் மற்றும் தொண்டன் அமைப்பை ஒரு தோப்புக்கு உருவகப் படுத்தினால், அந்த தலைவன் ஆலமரமாக இருந்து அனைத்தும் தன்னை சுற்றியே வைத்திருப்பது முன்னேற்றமா? இல்லை மாமரம், தென்னை மரம் போல் அனைவரும் சேர்த்து ஒன்று போல் வளர்வது முன்னேற்றமா? எது தலைவனின் பலம்?

அன்புடன்,
பிரைட்