நட்புக்காக
இன்று காதலர் தினம் - ஆம், அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள். நண்பர்களுடனான நட்பின் மேல் உள்ள காதலால், இந்த பதிவை இடுகிறேன்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத வயதில், முதன் முதலாய் வந்த stainless steel 10 பைசா நாணயத்தை எனக்குக் கொடுத்த நண்பன், பள்ளி பருவத்தில் எனக்கு TVS 50 ஓட்ட சொல்லிக் கொடுத்த தோழன், Calculas சொல்லிக் கொடுத்த தோழி, காசு இல்லாத போது 1 by 2 தேநீர் அருந்திய நண்பன் என்று பலரை நினைவு படுத்திக் கொள்கிறேன். ஆனால் அவர்களில் எவருடனும் தொடர்பில் இருக்க இயலவில்லை. அவர்கள் என்றும் நலமுடன் இருக்க அன்புடன் விழைகிறேன். அது போன்ற தருணம் மீண்டும் வராதா? என்று மனம் ஏங்குகிறது.
Friends are made not by choice but by convenience. எங்கோ படித்த ஞாபகம். Friendship is made for life time என்று இருந்தது ஒரு காலம். ஆனால், தற்போதைய நிலையில், everyone is just an entry in a smartphone contact list என்று மாறிவிட்டது. முகவரி தொலைத்த நட்பு போய், இப்பொழுது முகத்தையே தொலைத்து விட்ட வெறும் எண்கள் ஆகிவிட்டேனோ என்று சில சமயங்களில் தோன்றும்.
ஆனாலும், அந்த பழைய நண்பர்களையும், அவர்கள் நினைவுகளையும் அலசும் போது, மனம் மகிழ்கிறது. தொடர்பு விட்டுப் போன ஒவ்வொரு இனிய நட்பிற்கும் இது ஒரு நன்றி பதிவு.
நட்புக்காக,
பிரைட்