ஒண்ணுமே புரியல
காலையில் ஆரம்பித்து எது எடுத்தாலும் ஒரே குழப்பம்.
1. பச்சை தண்ணீரில் குளிப்பதா அல்லது வெந்நீரில் குளிப்பதா?
2. இட்லியா அல்லது தோசையா?
3. சட்டினியா அல்லது சாம்பாரா?
4. வேர்க்கடலை சட்டினியா அல்லது உ.கடலை சட்டினியா?
5. காபியா டீயா?
6. ...
...
10 வலைப்பதிவை ஆங்கிலத்தில் அடிப்பதா அல்லது தமிழில் அடிப்பதா?
...
இவ்வாறு எதற்கெடுத்தாலும் குழம்பி போகும் எனக்கு இப்போது அடுத்து என்ன செய்வது என்று பெரிய குழப்பம்.
பஹ்ரெய்ன் வாழ்க்கை போரடித்து விட்டது. சென்னைக்குத் திரும்பி சென்று விடலாம் என்று ஒரு மனம் சொன்னாலும் சென்னை சென்ற பிறகு என்ன செய்வது என்று இன்னொரு மனம் கேட்கிறது.
24 மணி நேரம் இண்டர்நெட் தொடர்பு. குளிர் பதப்படுத்திய தங்கும் வசதி, வீட்டு பராமரிப்புக்கு வேலையாள், அங்கே இங்கே என்று வெளியே சென்று வர கார் என்று சொகுசு வாழ்க்கை பழகி விட்ட பிறகு சென்னை சென்ற பிறகு வெயிலும், பேருந்துக்கு காத்துகிடத்தலும், நெரிசலும், வேர்வையும், கொசுக்கடியும் லேசாக பயமுருத்துகிறது.
எனினும், கடந்த ஒன்பது மாத அனுபவத்தைப் பார்த்தால் பெரியதாய் வேலையில் முன்னேற்றம் கண்ட மாதிரி தெரியவில்லை. அடுத்து என்ன முடிவு அடுப்பதுன்னு நான் ரொம்ப குழம்பி போய் இருக்கிறேன்.
இதுக்கு நடுவிலே, இந்த மைத்திரி கும்பல் ஏதேதோ புரளி பேச, நம்ம வீட்டு அம்மணி ரொம்ப டென்சன் ஆயிட்டாங்க.
ஆக மொத்ததில மேட்டர் என்னன்னா, "...ஓன்னுமே புரியல உலகத்துல...என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..."
...பிரைட்.